வந்திட்டேன் மேருகிரி பர்வதந்தன்னில் வாகுடனே சித்தர்களை யிறக்கிவிட்டேன் தந்திட்டார் எந்தனுக்கு மெச்சியேதான் தாரணியில் தீதமென்ற வித்தையெல்லாம் முந்திட்ட யெந்தனுக்கு கிருபைவந்து மோசமில்லை யென்றுசொல்லி யுபதேசித்தார் பந்திட்ட யெந்தனுக்கு பட்சம்வைத்து பாலித்தார் வெகுகோடி வித்தைதானே |