நாலான சாமமது வாட்டிப்பின்பு நலமுடனே குடோரியது வெண்காரந்தான் பாலான வயல்நண்டு வரப்புநண்டு பாகமுடன் பாலெடுத்து வெண்காரத்தை நூலான நூல்படியே தெளிந்துயானும் நுணுக்கமுடன் தானரைத்து வயத்திலூட்டி வேலான குடோரியென்ற காரந்தன்னால் விருப்பமுடன் தான்பிசறி மூசைக்கேற்றே |