தானான காலனுண்டென்று உலகோர்சொல்வார் தனிக்காலன் வேறில்லை மூலன்காலன் ஆனான ஆலமுண்டார் அஞ்சே செடீநுதார் அதைக்கண்டு பதஞ்சலியம் அன்புகூர்ந்தார் கோனான பிரபஞ்சத்தில் தில்லைக்குள்ளே கூப்பிட்டு ஆட்டுவித்துக் கூத்துகண்டார் ஆனான கன்னியன்று ஆலங்காட்டில் ஆட்டுவித்தாள் திருநடனஞ் சிவனைத்தானே |