| ஆட்டவென்றால் மேனிச்சார் புடமோபத்து அப்பனே முன்போல புடத்தைப்போடு வாட்டமுடன் புடமதுவும் தீர்ந்தபின்பு வாகான குமரியிட சாற்றாலாட்டு நாட்டமுடன் பத்துபுடம் குமரிச்சாற்றால் நலமுடனே போட்டபின் மைந்தாகேளு நீட்டமுடன் கையானின் சாற்றாலப்பா நினைவாகப் பத்துபுடம் போட்டிடாயே |