நானான சட்டமுனி நூல்கள்பார்த்தேன் நயமுடனே பெருநூலாம் எட்டுக்கோர்வை வேனான திரட்டுகளில் கோர்வைபத்து வெளியான தீட்சைகளில் கோர்வைநூறு பானான பாடல்களுமொன்று துவக்கிப் பாடினார்வெகுநூல்கள் வனந்தமார்க்கம் தேனான இருநூறு யெட்டுசொன்னார் தெளிமையுடன் கருவூராருரைத்தார்பாரே |