தாமேதானஃ கொங்கணவர் நூலைக்கண்டேன் தாறுமாறாகவல்லோ பாடிவிட்டார் யாமேதான் பெருநூலு எட்டுகண்டேன் பொங்கமுடன் தீட்சைநூல் பத்துகண்டேன் வேமேதான் கடைக்காண்டம் நாலுகண்டேன் மிக்கான நடுக்காண்டம் ஒன்றுகண்டேன் நாமேதான் கண்டபடி யாருங்காணார் நலமுடனே வின்னம்பல சித்தர்தாமே |