சித்தான புண்ணாக்கர் அனேகஞ்சொன்னார் சிறப்பான கமலமுனி யனேகஞ்சொன்னார் முத்தான புலத்தியரு மனேகஞ்சொன்னார் முனையான சிவவாக்கிய ரனேகஞ்சொன்னார் சுத்தான சுந்தரனாரனேகஞ்சொன்னார் சுருதிமுதல் பெருநூலாங் கண்டேன்யானும் நித்தான விராமமுனி யனேகஞ்சொன்னார் நீடூழிசாத்திரங்கள் கண்டிட்டேனே |