தானான காவியந்தான் சத்தகாண்டம் தயவுடனே ஏழுலட்சம் கிரந்தந்தன்னை வேனான நூல்பார்த்து வுளவுகண்டு விருப்பமுடன் பாடிவைத்தேன் ஏழுகாண்டம் மானான மறைப்புமத லில்லாமற்றான் மாற்கமுடன் மனிதர்பேரில் பட்சம்வைத்து கோனான குருவருளால் காலாங்கிதம்மைக் குறிப்புடனே சரணமிட்டுப் பாடினேனே |