அண்டபராபரமான முதலேகாப்பு அடியேனுங்காலாங்கிநாதர் பதங்காப்பு புகன்றுநின்ற காலாங்கிகுருபதமே காப்பு புகழான வல்லமுனி சித்தர்பதங்காப்பு தகன்றபெரியோர் ஞானிதான் பதமேகாப்பு சதாசிவத்தின் சுடரொளியே தனிப்பதமேகாப்பு நிகன்றசத்தகாண்டமது யேழாயிரந்தான் நிகடிநத்தினேன் மூன்றாவது காண்டமிதுதானே |