தீர்க்கவென்று கேட்டவுடன் நவகண்டர்தாமும் திரளான நாலுயுக வதிசயங்கள்யாவும் பார்க்கவே யெடுத்துரைத்தார் குருநாதர்க்கு பாங்குபெற யாவற்று மறிந்துகொண்டார் ஆர்க்கவே யென்னையர் காலாங்கிநாயர் அவருடைய விசுவாச வருளும்பெற்றார் மார்க்கமுடன் யென்னையர் ஞானம்பெற்று மானிலத்தில் வெகுகாலம் இருந்திட்டாரே |