தேசமாமின்னம்வெகு தேசமெல்லாம் சிறப்புடனே குளிகையது பூண்டுகொண்டு ஆசையுடன் சத்தசாகரமும் கண்டேன் அன்பாகப் பாடிவிட்டேன் சத்தகாண்டம் பூசையுடன் ஏழாயிரக்காவியத்தை புகட்டினேன் லோகத்துமாந்தர்க்கப்பா யாசையுடன் பரிபாஷை யில்லாமற்றான் பாரினிலே பாடிவிட்டேன் பண்பதாமே |