| சென்றேனே சுனைகண்டேன் குகையுங்கண்டேன் சிறப்பான கொங்கனவர் பதியுங்கண்டேன் குன்றான மலையோரம் சமாதியுண்டு கூட்டமுடன் அங்கிருந்தார் சித்தர்கூட்டம் பன்றானபூசையது ஆசீர்மத்தை பாங்குடனே கண்டுவிட்டே னடியேனப்பா தன்றான திரேதாயினுகத்திலப்பா வர்க்கமுடன் எல்லவரும் பிறந்தார்தாமே |