புருகுவார் நரகத்தில் மூலங்கண்டு புகுந்துமே தீயொளியில் கூடக்கூட்டி கருகுவார் களையிருந்த பானுவீட்டில் கலங்காமல் கலந்துமந்த ஒளியுங்கண்டு தகுறவே சந்திரனாற் விருந்தவீட்டில் தாமதமாடீநு இத்தணலை மேவப்பண்ணி அகுறவே ஆபரணச் சோலைபோல அழுந்தவே உடல்குளிர்ந்து புளகமாமே |