ஆனபின்பு கலியுகத்தில் நூற்றுப்பத்தில் அன்புடனே குளிகைகொண்டு பறந்துயானும் வானவருக் கொப்பான போகரென்று வையகத்தில் கீர்த்தியுடன் பேருபெற்றேன் தேனான காலாங்கி பாதஞ்சென்று தெரிசித்து அவருடைய வருளுங்கொண்டேன் கோனான என்னையர் குருவினாலே கோடியுகஞ் குவலயத்தில் வாடிநந்திட்டேனே |