ஒளியான வாசியைத்தான் உண்ணிக்கொண்டு உருண்டாலும் புரண்டாலும் உண்ணுமூலம் அளியான ஆணியடித்தார்போலக்கூடும் அப்பவொரு விக்கினங்கள் அனுகிடாது குளியான முழங்கால்மேல் குதிகால்போட்டுக் கொடுஞ்சுழுக்கால் கோமுதாசனத்தில் கூட்டு வெளியாக அணிந்தாக்கால் வலக்கால்மேலே விபரமாம் ஆசனத்தில் கூட்டிடாயே |