தானென்ற வித்தையிது யின்னஞ்சொல்வேன் சதாசிவமும் உமையவட்குச் சொன்னபாகம் வேனென்ற தங்கமது வரிக்கால்ரண்டு வெளுப்பான செம்பதுவும் முக்காலாகும் காமென்ற கட்டியதோர் நாகம்கால்தான் கருவான வெள்ளியது ஒன்றேபாதி யாமென்ற வெண்காரங் குன்றிகாணும் பாகமுடன் குகையிலிட்டு வுருக்கிடாயே |