தானான செந்தூரம் பதனம்பண்ணு தகமைபெற வெள்ளிதனில் பத்துக்கொன்று கோனான குருவருளால் வணங்கியேதான் கொற்றவனே தானுருக்கி குருவொன்றீய தேனான கருபோல யிருக்கும்பாரு செம்மையாம் வோட்டிலிட்டு வூதிப்போடு பானான மாற்றதுவும் எட்டதாகும் பான்மையுடன் பாடிவைத்தேன் போகர்தாமே |