| ஆடியங்கே பார்ப்பதற்கு முறையைக்கேளு ஆடவெல்லாம் சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு ஈடியங்கே இடகலையால் பூரித்துநின்று எழிலாக மூலத்தே நினைவாடீநுக்குமாயின் நீடியங்கெ பின்கலையினுள்ளேரேசி நேர்ப்பாக நேர்ப்பாக யேத்திவாநீ தூடியங்கே விரைத்தாக்கால் சுத்திநாடி திறமான வாதபித்தம் சிலேத்தமமும் போமே |