பாலனாம் யாக்கோபு சித்தர்தாமும் பட்சமுடன் கமலமுனிதன்னைக்காண சீலமுடன்றாகோப சாரந்தன்னால் சிறப்புடனே சமாதியிடந் தன்னிற்சென்றார் கோலமுனியானதொரு கமலர்தானும் குவலயத்தில் சமாதியிலே இருந்தாரங்கே ஞாலமுள்ள சித்தொளிவைக் காணவென்று மகிடிநச்சியுடன் சமாதியிடம் நெருங்கினாரே |