தாமெனமே யாக்கோபு கேட்கும்போது தயையுடனே கமலமுனி சாற்றலுற்றார் பூமானம் யாக்கோபு மைந்தாகேளு புகடிநச்சியுடன் சொல்லுகிறேன் உந்தனுக்கு நாமமுடன் தேசமெல்லாம் சுத்திவந்தீர் நாதாக்கள் சித்தர்முனி ரிஷிகள்தம்மை தாமமுடன வர்களிடம் வாதுபேசி சமர்த்துடனே வென்றுவந்த பாலாகேளே |