நின்றேனே கிடுகிடுத்து பயந்துயேங்கி நெடுமூச்சு தானெரிந்து பயமுமுற்று குன்றருகே நின்றுவிட்டேன் அடியேன்தானும் கூச்சலுடன் அசுராக்கள் கிட்டியேதான் சென்றுமே யெனையெடுத்து விழுங்கவந்தார் சோறாமல் யானுமல்லோ வார்த்தைபேசி வென்றுமே காலாங்கி நாயர்பாதம் விருப்பமுடன் தாள்வணங்கி பணிந்திட்டேனே |