| வேண்டியே நிற்கையிலே கணபதிதானும் விருப்பமுடன் போகரைத்தான் வளப்பங்கேட்டார் தாண்டியே வனமெல்லாந் தான்கடந்து தகமையுடன் வருவதற்கு நீதியுண்டோ பூண்டமனதுறுதியினால் வந்தாடீநுநீயும் பூலோகமானிடனும் வரலாமோதான் மாண்டுமே போவதற்கு சித்தர்தாமும் மன்னவனே தான்சபிப்பார் பெருமைபாரே |