தாமான சித்தர்முனி கேட்கும்போது சாங்கமுடன் காலாங்கிதனை நினைத்து வாமமுடன் குருசாமி காலாங்கிதன்னை வளமையுடன்தானினைத்து துதிக்கலுற்றேன் ஓமெனவே நாதாக்கள் கேள்விக்கல்லோ உத்தமனுமடியேனுங் கால்நடுங்கி சாமெனவே சீனபதி தன்னில்யானும் சட்டமுடன் குளிகைகொண்டு வந்திட்டேனே |