கேட்டேனே பிரம்மாவு மனமுவந்து கிருபையுடன் எந்தனுக்கு வழியுஞ்சொன்னார் நோட்டமுடன் சீனபதிதேசத்தார்க்கு நுணுக்கமுள்ள வதீதமென்ற வித்தைதன்னை தோட்டமுடன் வுளவுமுதலெல்லாஞ் சொல்லி தேசத்தில் சித்துவென்ற மர்மந்தன்னை காட்டியே விட்டதொரு வண்மையெல்லாம் கண்டாரே யாமானால் சபிப்பார்காணே |