ஜெனித்ததொரு செந்தூரம் சொல்லப்போமோ திறமான சித்தர்முனி ரிஷிகள்காவல் பனித்தடங்கண் வேகமது வதிகம்கொண்டு பாரிலே முப்பூவைப்போலேபூர்த்து தனியாகக் காரமுடன் வீறுகண்டு தாக்கான செம்பினுட கோட்டையெல்லாம் வனிகனைப்போல் பழுத்துமிசுவீறுகொண்டு வாகான தங்கமது போலேகாணும் கனியான கோத்தையெல்லாம் தங்கமாகும் கதிரோன்போல் பிரகாசம் காணும்பாரே |