கண்டேனே பலகோடி ரிஷிகள்மார்க்கம் கருத்திலே தான்நினைத்து பூசித்தேதான் மண்டலங்கள் சுற்றியல்லோ குளிகைகொண்டு மானிலத்தில் வெகுகோடி வதிசயங்கள் மண்டலங்கள் விண்டலங்கள் முழுதுஞ்சுற்றி தாரணியில் குளிகைகொண்டு பறந்தேன்யானும் பண்புடனே சமாதிபுரம் சுற்றிவந்தேன் பாரினிலே தாடகையாள் கதைகேட்டேனே |