பாரேதான் ராசாக்கள் கண்டதில்லை பாரினிலே வெகுகோடி ராஜரப்பா சீரேதான் பாக்கியங்கள் பெற்றுமென்ன தப்புடனே பலபணிகள் பூண்டுமென்ன நேரேதான் திருமுகமுங் கண்டதில்லை நீணிலத்தில் வசீகரத்தைப் பார்த்தோரில்லை சேரான செம்பதனை தகடதாக்கி சிறப்புடனே தான்துலக்கி முகம்பார்த்தாரே |