வருகவென்றால் மேல்நிற்கும் சூட்சந்தன்னை வாகுடனே யோரால்தான் தூக்கினாக்கால் பெருகலுடன் சமுத்திரத்தை விட்டுமைந்தா பெருமையுடன் கரைவழியே காணலாகும் துரிதமுடன் கடலுள்ளே சென்றுநீயும் துலையாத பொருள்களெல்லாம் காணலாகும் பருவமுட னிதிகாசவித்தையப்பா பாகமுடன் போகரிஷி பாவித்தேனே |