நளினமுடன் இன்னமொரு மார்க்கம்பாரு நாதாக்கள் சொன்னதிலை நாட்டிலோர்க்கு நளினமென்ற வடைக்கலந்தான் ஆனேயாகும் கருவான வான்குருவி கொண்டுவந்து மளினமுடன் ரோகமுதல் எல்லாம்நீக்கி மாசற்ற குடல்தலைகள் எல்லாம்போக்கி பளினமுடன் கருங்கோழி ரத்தஞ்சேரில் பாகமுடன் தான்பொரித்து எடுத்திடாயே |