பண்ணவே யின்னமொரு மார்க்கம்பாரு பாங்கான மதியுப்பு சேர்தானொன்று உண்ணவே சீனமது இருசேராகும் வுத்தமனே சாரமது கால்சேராகும் திண்ணமுடன் பூநீறு சேர்தான்பாதி தெளிவான கல்லுப்பு சேர்தான்காலாம் வண்ணமுடன் சரக்கெல்லாம் ஒன்றாடீநுக்கூட்டி வளமாகத்தான் பொடித்து கலசமாட்டே |