கட்டியென்னும் ரத்தமென்ற பாளமாச்சு காசினியில் ஆருந்தான் கண்டதில்லை திட்டமுடன் சொல்லிவட்டோம் சீனத்தாற்கு திறமுடனே கண்டறிந்தோர் புத்திவானாம் சட்டமுடன் இன்னமொரு பாகஞ்சொல்வோம் சார்வான இரும்பினுட சத்தைவாங்கு வட்டமென்ற கொப்பறையில் துப்பைக்கொட்டி வாகுடனே செம்மரத்தின் தூள்தான்போடே |