| தானென்ற சமாதியத்தான் முன்னேபார்த்து சாதித்து வம்பியாசம் பண்ணக்கேளு ஊனென்ற ஓகாரமாம் உதாசனந்தான் தள்ளு உத்தமனே சிகாரமென்ற கோபம்போக்கு வானென்ற வாயில் வந்தால் மனதுட்கொள்ளு மகத்தான துவைதமென்ற வாசினைதான் முந்தும் தேனென்ற விதிரண்டுஞ் ஜெயிக்கமாட்டார் திறமாகத் தள்ளிவிட்டுச் சமாதிசேரே |