கோடியாம் வேதையிது கோடாகோடி கொட்டினேன் மாணாக்கள் பிழைக்கவென்று நீடியே நிமிளைதனைக் காணமாட்டார் நிமிளையில் வர்ணமதைக் அறியமாட்டார் மூடியே பித்தளைபோல் கல்லுமப்பா முறுக்கலுடன் சிட்டம்போல் இருக்கும்பாரு தேடியே மலைந்தானும் கிட்டாதப்பா தேசத்தில் வதீதமென்ற சிட்டம்பாரே |