சென்றுமே ராசனிடஞ் சென்றுநீயும் சிறப்புடனே செந்தூரம் பரிட்சைகாட்டி குன்றிய தளவாகத் தான்கொடுத்து கொற்றவர்க்கு பத்தியமும் இல்லாமல்தான் வென்றுமே யவரிடத்தில் பிணிகள்தீர்த்து வேணவுபசாரமுடன் நிதிகள்பெற்று நன்றலுடன் சோடசோ வுபசாரந்தன்னால் நாயகனே தண்டிகையும் தருவார்தானே |