தானேதான் சென்றவிடஞ் சிறப்புமுண்டு தாரணியில் மாந்தரெல்லாம் பிரமைகொள்வார் வேனான சித்துமுனி ரிஷியென்பார்கள் வேதாந்த சித்தாந்த குருவென்பார்கள் கோனான தத்துவத்தில் கடந்தஞானி கொற்றவர்க்கு வுகந்ததொரு மகத்துவென்பார் தேனான மனோன்மணியும் கடாட்சிப்பாளே தேர்வேந்த ராபரெல்லாம் தியங்குவாரே |