ஊதிப்பார் மாற்றதுவும் ஆறுகாணும் உத்தமனே தங்கமது நாலுக்கொன்று சாதியாங் குங்குமப்பூ தங்கமப்பா சார்புடனே தான்சேர்த்து வாரடித்து வாதியாம் புடமதுவும் மாற்றுகாணும் மகத்தான வேதையிது உறுதித்தங்கம் பாதியாந் தங்கமது இரண்டுக்கொன்று பாகமுடன் மாற்றாறு சேர்த்துப்பாரே |