பலிக்காது காமிகட்கும் கர்மிகட்கும் பாங்குடனே பாவியென்ற சண்டாளர்க்கும் ஜொலிக்காது யேகமென்ற வித்தையப்பா சூட்சாதி சூட்சத்தைக் காணமாட்டார் ஒலிக்கவே பூரணத்தை மனதிலுண்ணி யுத்தமனே யெந்நாளும் சிவயோகம்பார் கெலிக்கவே பிராணாயந்தன்னிற்சென்று கெவனமுடன் குளிகைக்கு வழிதான்தேடே |