கேளேதான் செந்தூரம் செயநீர்தன்னால் கெடியுடனே நாற்சாமம் சுறுக்குத்தாக்கு வீனேதான் வீரமென்ற செயநீர்தன்னால் வேகமுடன் தான்கொடுக்க காரமேறி தானேதான் சட்டிதனில் மணல்தான்கொட்டி சாங்கமுடன் சட்டிதனை நடுவேவைத்து மீளேதான் மேலுமந்த மணல்தான்கொட்டி விளங்கவே மேற்சட்டிகொண்டுமூடே |