வித்தையாம் இன்னமொரு பாகம்கேளு வேடிக்கை சிமிட்டுவித்தை போக்குசொல்வேன் சுத்தமுள்ள வபினியது பலந்தானொன்று சுயமான கெந்தகமும் பலந்தானொன்று துத்தமுடன் துருசதுவும் பலந்தானொன்று துடியான வீரமது பலந்தாநாலு கத்தபத்தின் நீரதனை விட்டுயாட்டிக் கருத்துடனே மெழுகதுபோல் அரைத்திடாயே |