கொள்ளவே பட்டையது தயிலம்வாங்கி கொப்பெனவே தயிலமது சுறுக்குதாக்கு விள்ளவே சுறுக்கதுவும் எட்டுசாமம் விருப்பமுடன் தான்கொடுத்து எடுத்துப்பாரு மெள்ளவே கட்டியது புகையடங்கி மேன்மையுடன் பாஷாணமிருகிக்காட்டும் தள்ளவே சிவனாரின் வேம்புதானும் சாங்கமுடன் சுருக்கிட்டு நீற்றிப்போடே |