சென்றேனே நாதாக்கள் முனிவர்பக்கல் சேனையுடன் ரிஷிகூட்ட மங்கிருந்தார் நின்றேனே நெடுநேரம் சித்தர்பக்கல் நினைத்துமே காலாங்கிதனைநினைக்க பன்றான நாதாக்கள் முனிவர்சித்தர் பலபேரு மெந்தனுக்கு யாசீர்மித்தார் குன்றான ரிஷிமுனிவர் என்னைப்பார்த்து கூறுவார் அஞ்சலிகள் கோடிதானே |