| கூட்டையிலே பாஷாணம் சரிநேரொக்க குறிப்புடனே தானிடித்துப் பூநீர்சேர்த்து நாட்டமுடன் கண்ணாடி வாலைதன்னில் நயமுடனே சரக்கெல்லாம் வாலையிட்டு பாட்டமென்ற யடிப்பானைக்குள்ளேபோட்டு பாகமுடன் திராவகத்தை இறக்கிக்கொண்டு நீட்டமுடன் நீவங்கமுருகும்போது நீதான திராவகத்தை வூத்திடாயே |