மதிக்கவே யின்னமொரு கருமானங்கேள் மாசற்ற அயமதுதான் சேர்தானொன்று துதிக்கவே செம்பதுவுஞ் சேர்தான்பாதி துடியான கண்டரது சேர்தான் பாதி கதிக்கவே காரமது சேர்தான்காலாம் கருவான சாரமது சேர்தான்காலாம் விதிப்படியே சரக்கெல்லாம் ஒன்றாடீநுக்கூட்டி வித்தகனே கல்வமதில் பொடித்திடாயே |