பாரேதான் அயமதுவுங் களங்குமானால் பாரினிலே செம்புவித்தை நிஜமதாச்சு சீரேதான் செம்புநிகர் வங்கஞ்சேர்த்து சீர்பெறவே கரியோட்டிலூதிப்போடு நேரேதான் செம்பதுவு மூறலேகி நெகிழான வாதத்துக் குறுதியாச்சு தீரேதான் வெள்ளிதனில் நாலுக்கொன்று திகழாகத் தான்கொடுத்து வுறுக்கிப்பாரே |