தாமேதான் சூரத்துவிரையுமாகும் தாக்கான நாட்டிலுள்ள விரையுமாகும் வேமேதான் சரையதுவு மிரண்டதாகும் வெடிப்பான நற்சுரையும் பேடீநுச்சுரையுமாகும் நாமேதான் சொன்னபடி கொன்றைரண்டு நற்கொன்றை மயிற்கொன்றை ரண்டதாகும் போமேதான் சீந்தியது ரண்டதாகும் பொற்சீந்தி தானுஞ்சேரே |