புரிந்திட்ட காயமது மூச்சடங்கி பொங்கமுடன் வெகுகோடி காலந்தானும் பரிந்திட்ட மாகவல்லோ சமாதிதன்னில் பரிதிமதி காணாமல் இருந்தாரப்பா சரிந்திட்ட மாகவல்லோ சரிகைதன்னை சாக்கிரதை சுழுத்தியுடன் கிரியையொடு திரிந்திட்ட துரியாதி தாமும்பூண்டு துப்புரவாடீநு மண்மறைவில் இருந்தார்தாமே |