தாமுடனே திலோத்தமையும் ஊர்வசியுந்தானும் தகமையுடன் கொலுக்கூட மங்கிருந்தார் நேமமுடன் தபோதனர்கள் கோடாகோடி நேர்மையுடன் கைலாசகிரியில்தானும் வாமமுடன் தவசிருப்பார் லக்கோயில்லை வாகுடனே ரிஷிகூட்ட மனேகந்தானும் சேமமுடன் இந்திரனோடிருக்கக் கண்டேன் சேனவதிசயங்களெல்லாம் தெளிந்திட்டேனே |