தெளியவே யடியேனும் காத்திருந்தேன் தேவேந்திர பகவானு மெந்தனுக்கு எளியனா மெந்தனுக்கு கிருபைவைத்து எந்தனது பதிதேடி வந்ததாலே வெளியாங்கமாகவேதான் சாமிதானும் வேடிக்கை வினோதமெல்லாம் காண்பித்தேதான் ஒளியான ஜோதியென்னும் ஆசீர்மத்தில் உத்தமனே இடதுபக்கம் இடம்தந்தாரே |