வந்தேனே வைகுண்டம் யானும்சென்றேன் வாகுடனே சித்தரகளைக் கண்டேன்யானும் அந்தமுடன் தெண்டனைக்கு வாளுமானார் அப்பனே யான்கண்டதனேகமுண்டு சொந்தமுடன் எந்நாளும் வைகுண்டத்தில் சந்தரனே இருக்கமனுதான்கொடுத்து விந்தையுடன் வாக்கினைகள் நேர்ந்துதங்கே வேகமுடன் காண்பேனே போகர்தாமே |