பார்க்கவே பத்துவித தியானம் சொல்வேன் பரிவான சடாதாரத் தியானமொன்று மார்க்கவே தேகமொன்று தியானமொன்று மருவிநின்ற மண்டலத்தில் தியானமொன்று வேர்க்கவே பிரமத்தின் தியானமொன்று வெளியான விட்டுணுவின் தியானமொன்று ஊர்க்கவே ருத்திரனாம் தியானமொன்று உகப்பான தேவதா தியானமொன்றே |